வாங்க நாங்களும் கொகா கோலா வீட்டிலேயே செய்து குடிக்கலாம்...
கொகா கோலா தயாரிக்க கலப்பது தான் என்ன? மற்றய பானங்களை விட விஷேச சுவைதரும் இரசாயனம் எது? என்பதற்கெல்லாம் விடை இங்கே...
சேர்க்கப்படும் கலவைகள்:
Fluid extract of Coca - 3 drams USP
Citric acid - 3 oz
Caffeine - 1oz
Sugar - 30
Water - 2.5 gal
Lime juice - 2 pints 1 qrt
Vanilla - 1oz
Caramel - 1.5oz or more to colour
* Merchandise 7x (இரகசிய கலவை)
7X flavour (use 2oz of flavour to 5 gals syrup):
Alcohol - 8oz
Orange oil - 20 drops
Lemon oil - 30 drops
Nutmeg oil - 10 drops
Coriander - 5 drops
Neroli - 10 drops
Cinnamon - 10 drops
அப்ப சொல்லுங்க எப்ப உங்கவீட்டு கொகா கோலா குடிக்கலாம்?.....
என்ன சும்மா அலட்டுறானே எண்டு யோசிக்காதீங்க! இத முழுசா வாசிச்சு முடிச்சா நீங்களும் என்ன கூப்பிடுவீங்க உங்க வீட்டு கொகா கோலா குடிக்க..
ஸ்ஸ்..... நினைக்கும் போதே இனிக்கும் சுர்ரின்னு உணர்வை உடனே கொடுக்கிற குளிர்பாணங்களுக்கெல்லாம் மூத்த பாணம் COCA COLA. எத்தனை (க்) கோலாக்கள் வந்தாலும் இந்த கொகா கோலா வை மிங்ச யாராலும் முடியாது, ஒரு வேளை புதிது புதிதாக முலைக்கும் கோலாக்களுக்கு பிரதான காரணம் கூட இந்த கொகா கோலா தயாரிப்பின் இரகசியம் வெளிவந்ததாக இருக்கலாம்னு நினைச்சேன் ஆனாலும் லொஜிக் எங்கயோ இடிக்குது ஏன்னா, இந்த விஷயம் Puplicகிக்கு வந்ததே 2011 பெப்ரவரி 15ம் தேதி தான் So... ஆனாலும் இது பத்திரிகைக்கு வரமுதலே வேற எங்கயாவது வெளிவந்திட்டான்றதும் சந்தேகம் தான். அத விடுங்க..
"Atlanta" என்பவரால் 1886 ம் ஆண்டு "Jacoba" எனும் பார்மசியில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் "Asa Griggs Candler" என்பவரால் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட, 200க்கு மேற்பட்ட நாடுகளில் தற்போது சந்தையில் உள்ள பாணமே கொகோ கோலா.
கொகா கோலாவுக்கு அடிமையானவங்க பலர் என்பதை விட அமமையில்லாதவங்க ஒரு சிலர் என்று சொன்னாத்தான் பொருத்தம். இவ்வளவு பெறுமை கொண்ட கொகா கோலாவின் தயாரிப்பில் உள்ள இரகசியம், கொகாகோலா நிறுவன ஊழியர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை இப்போ வெளியே கசிந்திட்டுது.
இத பற்றி "This American Life" என்ற சஞ்சிகை கொகாகோலாவில் சேர்க்கப்படும் இராசயனங்களுக்கான கலவைவிகிதம் பற்றி "Atlanta" அவர்கள் 1879 ம் எழுதிய ஆக்கத்தோட பக்கம் ஒன்ற புகைப்படம் பிடிச்சு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திட்டாங்க..
இது தாங்க அந்த பக்கம் |
பரபரப்பு தானே "நானும் பார்கனும் இவன நம்ப முடியாது" இப்படி அடுத்த வீட்டு விசயம் கேக்க ஆர்வமா இருக்றவங்களுக்கு எந்த தடையுமில்ல நானே லிங்க் தற்றேன் போய் பார்த்திட்டே வாங்களேன்: http://www.thisamericanlife.org/blog/2011/02/our-cola-recipe-story-makes-international-news
சாப்பிட கூப்பிட்டு சாப்பாடு போடாம சாப்பாட்ட பற்றியே கதைச்சிட்டு இருந்தா அதபோல கொடும வேற ஒன்டுமில்லேங்க..(அனுபவிச்ச எனக்கு தானே தெரியும்.) ம் விசயத்துக்கே வந்திடுரேன்..
கொகா கோலா தயாரிக்க கலப்பது தான் என்ன? மற்றய பானங்களை விட விஷேச சுவைதரும் இரசாயனம் எது? என்பதற்கெல்லாம் விடை இங்கே...
சேர்க்கப்படும் கலவைகள்:
Fluid extract of Coca - 3 drams USP
Citric acid - 3 oz
Caffeine - 1oz
Sugar - 30
Water - 2.5 gal
Lime juice - 2 pints 1 qrt
Vanilla - 1oz
Caramel - 1.5oz or more to colour
* Merchandise 7x (இரகசிய கலவை)
7X flavour (use 2oz of flavour to 5 gals syrup):
Alcohol - 8oz
Orange oil - 20 drops
Lemon oil - 30 drops
Nutmeg oil - 10 drops
Coriander - 5 drops
Neroli - 10 drops
Cinnamon - 10 drops
சீனி அளவு எவ்வளவு எண்டு புத்தகத்தில எழுதி இருக்கிறது தெழிவா இல்லையாங்க நீங்களே அளவு பார்த்து போட்டுக்குங்க. நம்ம அம்மா மார்தான் சீனி, உப்பு அளவு பார்த்து போடுறதுல கில்லாடிகளாட்சே...
அப்ப சொல்லுங்க எப்ப உங்கவீட்டு கொகா கோலா குடிக்கலாம்?.....
இதெல்லாம் சரி இவ்வள வெல்லாம் கொகா கோலா பற்றி பெருமையா சொன்ன நா, இன்னொரு விசயமும் சொல்லபோறேன் கேட்டு அடிக்க வந்துடாதீங்க ஆனா இது இரண்டு வருசத்திற்கு முதல்ல என்னோட ஆக்கம் ஒன்டில வந்தது தான். அத இப்ப ஞாபகப்படுத்தினா பொருத்தமா இருக்கும்னு நினைக்குறேன்:முதல்ல படம்பாருங்க,அப்பரம் நீங்களே கதை சொல்ல ஆரம்பிச்சுடுவீங்க..
படம் 01 - தனியே கொகா கோலா |
படம் 02 - போலோவை கலந்தவுடன் |
படம் 03 |
படம் 04 |
படம் 05 - இரசாயன தாக்கம் நிறைவடைந்த பின் |
இது வேற ஒன்னுமில்லேங்க மென்தோல் என இரசாயன பெயரால் அழைக்கப்படும் "Polo"
இத கோகா கோலாவுடன் கலந்தா என்ன நடக்கிறது என்பது தான் மேல உள்ள படத்தோட கதை, வெளியிலயே இப்படினா, Acid ஐ சுரந்து கொண்டிருக்கிற வயிற்றினுல்ல இரண்டும் கலந்தால் என்ன ஆகும். நினைத்துப்பார்க்கவே பயமா இருக்கில்ல. அதுக்குதான் சொல்லுறது எதயாவது சாப்பிடும் போதும் குடிக்கும் போதும் அதபற்றி நன்கு அறிந்து வைச்சிருக்க வேனும்னு.. இல்லைனா எங்களுக்கும் டிக்கட் ஈசியா கிடைச்சிருங்க- கிரிக்கட்டுக்கு இல்ல பரலோகத்திக்கு.........
"நல்ல இருப்பம் நல்லா இருப்பம் எல்லாரும் நல்லா இருப்பம் இத வாசிக்கிறவங்கள தவிற"... ஹாஹா ...கோபப்படாதீங்க, சும்மா ஒரு கிழுகிழுப்புக்கு சொன்னேன்பா நீங்களும் நீடூழி வாழ்வீங்க...