Share

எனது கிறுக்கல்கள்...

வணக்கம் நன்பர்களே!


எங்கே செல்கிறது  ஏ நைன் (A9)


பஸ் பயனத்தில நியூஸ் கேட்டு இண்டைக்கு உரு கிழி கிழிச்சிடனும்னு கடுப்போட வந்து laptop ல கைவைச்சேன் ஆனாலும் ஒரு விஷயம் பற்றி பேசனும்னா அந்த விஷயம் சம்பந்தமா நாமலும் சில மேலதிக தகவல்கள தெரிஞ்சிருக்கனும்லயா அதுக்காக கொஞ்சம் வலையில தேடினேன். 
 சிக்கினதெல்லாம் இது தான்... 
அழகான கோல்ட்பிஸ் ஸ அழுக்காக்கி விழுங்கின கிழட்டுச் சுறாக்கள்.









 "இந்த காலத்து லைப்ல இதெல்லாம் சகஜமப்பா" எண்டு சொல்ற அலவுக்கு மாறீட்டுது  தமிழ் சமூகத்தோட கலாச்சார சீர்கேடும், பெண்ணியல் துஸ்பிரயோகங்களும்...  ரேசன் கடை அரிசியில கல்லிருந்தா தூக்கி போட்டிடு சமைக்கிறத போல பல பேர் போற மாதிரி நானும் எண்ட வேலையுண்டு நானுண்டு எண்டு போக என் மணம் இடம் தருதில்ல..  எங்களபோல எத்தினையோ பேர் ஆதங்கப்பட்டிருப்பாங்க, குற்றஞ்செய்த ஆசாமிகள் மேல கடுப்பாயிருப்பாங்க .. ஆனாலும் அப்பெல்லாம் எங்கள் எல்லாருக்கும் விடையா ஒரு வினா வந்து நிற்கும் அதுதான் "எங்களால என்ன செய்ய முடியும்??"  

அண்மையில் லோஸண்னா (Vettri-FM A.R.V Losan) ஒரு நிகழ்ச்சி நடத்தியிருந்தார் இவ்வாறாணவர்களுக்கு எவ்வாறான தண்டணை வழங்கப்பட வேனும்னு நேயர்களிடம் கருத்து கேட்டிருந்தார்.. நல்லதொரு நிகழ்ச்சி என்னால அந்த நிகழ்சியில் பங்குபற்ற முடியாம போயிற்று ஆனாலும் ஒப்பிஸ் போகும்வரை கேட்டுக்கொண்டுதான் போனேன்... என்னைக் கேட்டால் இவங்களையெல்லாம் மனிதர் என்ற அடையாளத்தை இல்லாம செய்யனும்,


இதபோல இந்தியாவில பொது இடங்கல்ல திருடர்களோட பெயர்ப்பலகை வைக்கிற மாதிரி கோவில்கள் சேர்ச், பள்ளி எல்லா வணக்கஸ்தலத்திலயும் இவங்கட படமும் பெயரும் காட்சிப்படுத்தப்படனும்.  அதவிட எந்தவித அரச சலுகைகளோ அல்லது அரசாங்க காரியங்களில் ஈடுபடவோ முடியாத மாதிரி அரசு சட்டம் மூலம் கட்டுப்படுத்தனும், கணடால டிரைவிங் லைசன்ஸ்ல ஸ்டார் அடிக்கிற மாதிரி இவங்களோட அடையாள அட்டையில ஒரு ரெட் மார்க் போடனும்.. இவங்க எங்க போனாலும் (உதாரணமா அரச காரியங்கள், அல்லது வேலை இன்ரவியு) அந்த ரெட் மார்க் இவங்கள குற்றவாளிகள் என்று அடையாளப்படுத்துறதா இருக்கும். இவங்களுக்கு எந்த ஒரு நிறுவணமோ, அல்லது அரசாங்கமோ வேலை கொடுக்கப்படாது...  இப்டி அடுக்கீட்டே போகலாம்.

இது இப்படி இருக்க ரெண்டு நாளைக்குமுதல்ல வேலை நிமித்தமா பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர சந்திச்சிருந்தேன்.. எங்களோட ஒப்பிஸ் ஸ்டாப் பைல் செக் பண்ண கொஞ்சம் லேட் ஆகினதால அதிகாரி என்னோட சும்மா அரசியல்ல ஆரம்பிச்சார் ஆரம்பிக்கும் போதே நினைச்சேன் இந்த ரெயின் மாத்தறையில தான் நிக்குமோனு ஆனா அது மாத்தறையோட நிக்காம திரும்பி யாழ்ப்பாணம் வரை போய்த்தான் நிண்டது.. அவர் BBC Tamil  நியூஸ் மாதிரி Flowவா சொன்னாலும் அவர் சொல்ர ஒவ்வொன்றுக்கும் பதில் பேசமுடியல எல்லாமே ஞாயமாவும் நீதியையும் தான் பேசினார் மனுசன்.. அவர்  சொன்ன ஒருசில தகவல்கள் என்ன கொஞ்சம் மெய்சிலிர்க்க வச்சுது.

 துஸ்பிரயோகம் பற்றி அவர் வரிசையா சொண்னதில 80/100 வீதம் (55)வயசுக்கு மேற்பட்வர்களாலயும் 10/100 வீதம் (14~20வயசு) சிறுவர்களாலயும்   10/100 வீதம்  இணந்தெரியாத இளைஞர்களாலயும் நடந்திருக்கு எண்டு விளக்கமா சொண்ணார். அண்டைக்குதான் மாத்தறையில ஒரு விபச்சார விடுதிய பிடிச்சிருந்தாங்க அந்த விடுதிய நடத்தினவர் கூட 70வயது முதியவர்.  என்னால நம்பவே முடியல.. நாண் கேட்டேன் இந்த பெடியங்கள் எல்லாம் சும்மா இருக்குறாங்க கிழடுகளுக்கு என்ன பிரச்சணை ஏன் இப்பிடி ஆகீட்டாங்க எண்டு நீங்க நினைக்குரீங்க எண்டு. 


நேற்று மேர்வின் சில்வா சொன்னததான் அவரும் சொன்னார் ஆனா சரியான விளக்கத்தோட.. " அந்த காலத்தில இப்பிடி இளம் பெண்கள் யாரும் அரைகுரையா தொட தெரிய, கை இடுக்கு தெரிய உடுத்திரதில்ல (சினிமா படங்கல தவிர) ஒரு படத்தில ஒருத்தி அப்பிடி உடுத்தியிருந்தாலே இங்கயிருந்து யாழ்ப்பாணம் போவாங்கள் அந்த படம் பார்க்க, ஆனா இப்போ சின்னஞ்சிறுசிலயிருந்து 45 வயசு ஆண்டி வரைக்கும் ஒரேமாதிரி உடுப்பு எண்டு சொல்லிக்கொண்டே கைய காட்டினார் அங்க பார் தூரயிருந்து பார்த்தா ஆண்டியா மகளா எண்டு தெரியல" என்டு சொல்லி ரோட்ல போயிட்டிருந்த ஆண்டிய உதாரணம் வேற காட்டினார். 


அதோட இதையும் சொன்னார் அவர்ட பாணியில "பொடியளால இப்போ இந்த பிரச்சிணை யில்ல அவங்க சின்னனில இருந்தே சினிமா பரர்த்து வளர்ந்தவங்க கொஞ்சம் முளைச்ச உடனேயே ஸகூல்ல டியூசன்லனு ஒவ்வொண்ட செட்பண்னிடுரான்கள். போன் கதைச்சே அவன் பாதி லைப்ப ஓட்டீடுறான். "மே லொகோலோண்ட தமா நிகங் இண்ட பெரி பிரஸ்னே" எண்டு அவர்ட மொழியில சொன்னார். இப்போ யாழ்ப்பானமும் கெட்டுபோச்சு... எண்டு இழுத்தவர் "உங்க  யாழ்பாணம் ஸகூல் புள்ளைங்களுக்கு சொல்லுங்க கவணமா இரக்கனும், இரவில கடைக்கு போககூடா, அம்மா போக சொன்னா அடி போடுவேன் சொல்லனும்" எண்டு கொச்சைத் தமிழ்ல சொன்னார். ஒருபக்கம் சிரிப்பும் ஒருபக்கம் இப்டி ஆகீற்றே தமிழன்ட நிலம எண்டு யோசிச்சிட்டே விடைபெற்று வந்திட்டேன்.  

ஆனாலும் ரெண்டு நாளா இந்தபிரச்சனைக்குறிய தீர்வு என்ன என்றத யோசிச்சு யோசிச்சு விடைதெரியாமல போயிட்டு உடுப்புதான் பிரச்சனையெண்டு நாம உடுப்புச்சாட்டினாலும் 4 வயது குழந்தையோடை உடுப்பு கூடவா அந்த 60 வயது கிழவனுக்கு செக்ஸியா தெரிந்சுது..?. இதுவும் ஒரு காரணமா கூட இருக்கலாம், ஆனால் அது மட்டுமல்ல காரணம் 










யாழில் போதைவஸ்து பாவனையும் மிகவேகமாக பரவி வருவதால் அதுகூட ஒரு காரணியாக இருக்கலாம். எது எவ்வாறாயினும் எதிர்கால பிஞ்சு உள்ளங்களை சிதைக்கும் இவ்வாறான மனித விலங்குகளை மனிதனாக நடத்தாமல் விலங்குகளுக்குரிய பானியிலேயே நடத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் உருவாக இருக்கும் இவற்றைப்போன்ற விலங்கினங்களை தடுக்கலாம். இவற்றையெல்லாம் இலங்கையில் அதுவும் வடக்குகிழக்கில் மிகஅதிகமான தொண்டு நிருவணங்கள் பணியில் இருந்தும் கவணத்தில் எதுக்காதிருப்பது பெறும் கவலையளிக்கிறது. தொண்டு நிறுவணங்களின் பணி மிகச்சிறந்தது அவர்களால் மட்டுமே மிக விரையில் ஒரு சமூகத்தில் உலவியல், சமூகவியல் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.  

அவர்களோடு தழில்பேசும் ஊடகங்களும் இவற்றிற்கு பங்காற்ற வேண்டும், இந்தியாவி புள்ளிராஜா வுக்கு எயிட்ஸ் வருமா என்ற விளம்பரம் மூலம் எயிட்ஸ் பற்றி எவ்வாறு மிகப்பெரிய விளிப்புணர்வு ஏற்பட்டதோ, அதேபோல் எம்மாலும் விளம்பரத்தால் எம் சமூக்திற்று சில நல்லகருத்துக்களை எடுத்துச்செல்ல ஊடகங்கள் உதவிபுரியவேண்டும். சூரியன் எப்.எம் மில்  நித்திரை வருமாயின் வாகனத்தை செலுத்தாதீர் என இரவில் அடிக்கடி ஞாபகப்படுத்துவது  இராப் பயனிகளுக்கு  பிரயோஜனமாய் உள்ளதைப் போன்று ஏனைய வானொலிகளும் இவ்வாறான சமூகத்திற்கு தேவையான ஒருசில கருத்துக்களை பரிமாற்றிக் கொள்வார்களாயிள், எம் தமிழ் சமூகம் சற்றேனும் தலை நிமிரும் தான் பெற்ற அவமாணத்திலிருந்து...

  அடுத்தவர்களை, அடக்குமுறையாளர்களை, அரசியல்வாதிகளை குறைகூறுவதை விடுத்து . நாங்கள் தான் சமூகம், நாங்கள் தான் எங்கள் சமூகத்தின் அங்கத்தவர்கள் என்று நிணைத்து ஒவ்வொரு இளைஞனும் இவ்வாறான சமூக சீர்கேடுகளுக்கெதிராக குறல் கொடுக்க வேண்டும். இவற்றுக்காண தீர்வுகாண இக்கால இளைஞர் சமுதாயம் சற்றே தயாரானால் நிச்சையம் இவ்வாறான குற்றச்செயல்களை சற்றேனும் கட்டுப்படுத்த  முடியும் என்றே என்மணம் சொல்கிறது. குறிப்பாக யாழ் பல்கலைக்கழக சமுதாயம் பாடசாலைச்சமூகம் ஒன்றிணைந்து விழிப்புணர்வுகளை ஏங்படுத்துவதன் மூலம் ஓரலவேனும் குறைக்கலாம். 60 வயது கிழடைத்தான் திருத்த முடியவிலலையெனிலும் "துஸ்டணைக்கண்டால் தூர விலகு" என்று அந்த 7வயது பிஞ்சு உள்ளத்திலாவது ஒரு தைரியத்தை உண்டுபண்ணலாமே...

மாற்றங்களுக்கான எதிர்பார்ப்புடன்
உங்கள் kindly SABA

Post a Comment

FB மூலம் உங்கள் கருத்து....

பகிர்ந்து கொள்ள:

Related Posts Plugin for WordPress, Blogger...

4Tamil