நம்ம நாட்டலதான் நமக்கெல்லாம் கொஞ்சம் யோசிக்கலாம்னு ஒரு நிமஷம் ஓய்வா சாஞ்சா நம்ம நாட்டுப் பிரச்சணைதான் ஞாபகத்திற்கு வரும் ஆனால் வெள்ளக்காரர்கள் நிமிஷத்திற்கு நிமிஷம் ஏதாவதொன்றை கண்டுபிடித்துக்கொண்டுதான் இருக்காங்க.
அந்த வரிசையில இப்போ புதுசா வந்திருக்கிறதுதான் இந்த யூட்டீயூப்(YouTube) சர்ச்சை எண்டு YouTube ADDICT நிறுவனம் சொல்லுது. இந்த தொழில்நுட்பத்தால உங்கள் வீட்டு தொலைக்காட்சியின் ஊடாகவே யூட்டீயூப்(youTube) வீடியோக்களை உடனடியாகப் பார்க்க இயலுமாம். இதற்காகத் தனியே கணினி(computer), இணைய இணைப்பும்(Internet) தேவையில்லையாம். எப்படி இது சாத்தியம்னு கேக்ரீங்களா?
அதகேட்டா அதிர்ந்திருவீங்க!. இதுக்கு ஒரு சின்ன ஸ்டிக்கரவாங்கி உங்கள் ரிவியில ஒட்டினா போதுமாம். அதாங்க புதுசா நாம Toyota Corella கார் வாங்கினா ரிவி ரேடியா சனலுக்காக ஸ்டிக்கர் ஒன்னு ஒட்டி வருமே அது மாதிரி ஆனா இந்த ஸ்டிக்கர் அவ்வளவு பெரிசில்ல. உங்க சுட்டிப்பொன்னு பாவிக்கிற அழிறப்பர் அளவு நீளந்தான். இந்த படத்த பார்த்தா உங்களுக்கே புரியும்.
என்ன உங்களுக்கும் தொடர்ச்சியா யூட்டீயூப்(YouTube) பார்க்கனும்னு ஆசையா இருக்கா? கவலைய விடுங்க இவ்வளத்த சொன்ன நா அதச்சொல்லாம விட்டுடுவேனா?
நம்ம நாட்டுக்கும் வந்திட்டா கட பேரோட இங்க போட்டிரமாட்டேன். அவசரப்படாதீங்க நம்ம நாட்டுக்கு இன்னும் அறிமுகமாகவேயில்ல!
மேலதிகமா தெரிஞ்சுகொள்ளனும்னா நீங்க இத கொஞ்சம் பாத்திட்டுதான் வாங்களேன்: http://ignaciopilotto.wordpress.com/2009/03/06/youtube-addict/
1 comments:
நன்பர்களே பயந்திடாதீங்க இது எந்தக்கொப்பியுமிள்ள நான் எழுதினதுதான். சும்மா ஒரு கிழுகிழுப்புக்காக இந்தியத்தமிழில் எழுதினேன். பிடிச்சிருந்தா பாராட்டுங்க பிழையிருந்தா மண்ணிச்சிடுங்க.
அன்புடன் உங்கள் சபா
Post a Comment