Share

Saturday, May 2, 2009

எல்லோரும் அலசும் விடயம் பற்றி நாம் சற்று ஆராய்ந்து தான் பார்ப்போமே.......


"அந்திரெக்ஸ், சிக்கன் குனியா வரிசையில் இப்போது புதிய வருகை (ஸவைன் புலூ) பன்றிக்காய்ச்சல்" எல்லோரும் அலசும் விடயம் பற்றி நாம் சற்று ஆராய்ந்து தான் பார்ப்போமே.......

இவ்வாறு எண்ணி இணையத்தை புரட்டிய பின்தான் எனக்கு புரிந்தது இவையெல்லாம் இயமனின் விளையாட்டுகளில் ஒன்று என்று.


நான் இத்தகவலை பதிவேற்றும் வரை (சனிக்கிழமை, 02 மே 2009 காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்)

மெக்சிகோவில் 380 பேர் பலியாகியுள்ளனர்

அதேவேளை பாதிக்கப்பட்டோரில்

மெக்சிகோவில் 1,614 பேர்,
அமெரிக்காவில் 20 பேர்,
கனடாவில் 6 பேர்,
இந்தியாவில் 3 பேர் அடங்கியுள்ளனர்

பரவியுள்ள அல்லது நோய் அரிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நாடுகள்

அமெரிக்கா
கனடா
தென்கொரியா
நியூசிலாந்து
இங்கிலாந்து
நெதர்லாந்து
சுவிட்சர்லாந்து
ஜெர்மனி
பிரான்சு
டென்மார்க்
ஸ்பெயின்
இஸ்ரேல்
கோஸ்டாரிகா


ஆசிய நாடுகளில் மூவர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் வினித் சவுத்திரி கூறியுள்ளதாக இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளிட்டுள்ளது.

எனவே அடுத்து ,....


பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த 5 நாட்களுக்கு யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று மெக்சிகோ நாடு எச்சரித்துள்ளது. அது போல மெக்சிகோ நாட்டுக்கு யாரும் செல்ல வேண்டாம் என உலக நாடுகள் தங்கள் நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. உலக சுகாதார குழுக்கள் மெக்சிகோவில் முகாமிட்டு பன்றிக்காய்ச்சலை முடக்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

இதேவேளை ஆசிய நாடுகளுக்கு பன்றிக்காய்ச்சல் பரவாமல் இருக்க எல்லா நாடுகளும் மருத்துவ முகாம்களை அமைத்துள்ளன. இந்த நிலையில் (Honghong)ஆங்காங் நாட்டில், மெக்சிகோவில் இருந்து வந்தவர் மூலம் பன்றி காய்ச்சல் பரவி இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து. அவர் தஙகியிருந்த ஓட்டல் "சீல்" வைக்கப்பட்டு அந்த ஓட்டலில் தங்கியிருந் சுமார் 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பன்றிக்காய்ச்சல் மிக வேகமாக பரவி உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வந்துள்ள 2 ஆயிரம் பேருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருந்ததாக கூறப்பட்டு. அந்த 2 ஆயிரம் பேருக்கும் முழுமையாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு அவர்களை அரசின் கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு எல்லா விமான நிலையங்களிலும் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய அரசு கூறுகிறது.



இதுவரை பன்றிக் காய்ச்சலின் விளைவுகள் பற்றி பார்த்த நாம் இப்போது பன்றிக்காய்சலின் உருவாக்கம் மற்றும் அதன் பரவுகை பற்றி ஆராய்வோம்.

முதன் முதலில் 1918-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இப் பன்றி காய்ச்சலானது
ஸ்பெயினில் பரவியது. பின்னர் உலகம் முழுவதும் பரவி 10 கோடி பேர் பலியானார்கள். பின்னர் 1968-ம் ஆண்டு ஹாங்காங்கில் பரவி உலகம் முழுவதும் தொற்றியது. இதில் 10 லட்சம் பேர் பலியானார்கள். 1976-ல் அமெரிக்க படைவீரர்களை புதிய தகவல்களை தமிழில் தகவல் தரும் ஒரு இணையப்பக்கம். ஓர் டு இந்நோய் தாக்கியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்சில் பரவியது
பின்னர் மறைந்து பொன இக்காய்ச்சல் மீண்டும் 2009 ல் ...


சரி இவ்வளவு அழிவையும் ஏற்படுத்துகிறதே இந்த "பன்றிக்காய்ச்சல்" என்பதுதான் என்ன?

பன்றிக் காய்ச்சல் என்பது ஆர்த்தோமிக்சோவிரிடே (Orthomyxoviridae) குடும்பத்தை சேர்ந்த தீ நுண்மத்தினால் வரும் ஒரு உயிரழிக்கும் நோயாகும். இந்நோய் இன்புலியன்சா A, இன்புலியன்சா B, மற்றும் இன்புலியன்சா C என்னும் மூன்று வகையான தீநுண்மத்தினால் ஏற்படுகிறது. இதில் இன்புலியன்சா A வினால் மிக அதிகமான அளவிலும், இன்புலியன்சா C னால் மிக அரிதாகவும் தொற்றுதல் ஏற்படுகிறது. இந்நோயை பரப்பும் தீ நுண்மம் மிகவும் அரிதான மரபு அணு தொகுதியை பெற்று இருப்பதால், இதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியப்படைந்துள்ளார்களாம்

பன்றிக்காய்ச்சல் என்பது மனிதர்களின் சுவாச உறுப்பைத்தான் முதலில் தாக்கும். பிறகு கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு காய்ச்சல் அடிக்கும். அது முற்றும் நிலையில் மரணம் ஏற்படும். பன்றிகளை புளு(Flu) வைரஸ் என்றொரு வகை வைரஸ் கிருமி தாக்குவதுண்டு. இந்த வைரஸ் கிருமிகளில் H1, H2, H3, N1, N2, N3, என்று பல்வேறு உட்பிரிவுகள் இருக்கின்றன. இந்த கிருமிகள் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும். பிறகு மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு மிக வேகமாக பரவக்கூடியதாகும். இக்காய்ச்சல் மொத்தம் 6 கட்டங்களாக உலக சுகாதார நிறுவனத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் 3 கட்டங்களில் ஆபத்து இல்லை என்றும். 3-வது நிலைக்கு மேல் செல்லும் போது பன்றிக்காய்ச்சலில் இருந்து உயிர்தப்பஇயலாது என்றும். மேலை நாடுகளில் தற்போது இந்த 3-வது நிலைக்கு மேற்பட்ட பன்றிக்காய்ச்சல்தான் மிக வேகமாக பரவிக்கொண் டிருக்கிறது என்றும் ஆராய்ச்சிமுடிவுகள் தெரிவிக்கின்றன.

காய்ச்சலின் அறிகுறிகள்

பன்றிகளுக்கு இந்த காய்ச்சல் வரும் நிலையில் அதன் காற்று பட்டாலே காய்ச்சல் மனிதர்களுக்கு வந்துவிடும். காய்ச்சலை தொடர்ந்து சளி, இருமல், தொண்டை வறட்சி, உடல் சூடாதல், உடல் பலவீனம், வலி, தொண்டைப் புண், பசியின்மை, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை இக்காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும்.

நோய் தொற்றும் முறை

பன்றிக்கறி உணவு மூலமாக இந்த நோய் பரவும். பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் சாதாரணமாக தும்மினாலே போதும், அவர் அருகில் அந்த காற்றை சுவாசிக்கும் அனைவருக்கும் பன்றிக்காய்ச்சல் எளிதாக தொற்றிக் கொள்ளும்.

மருந்து

இந்த நோயைக்கட்டுப்படுத்த பன்றிகளுக்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த காய்ச்சலிலிருந்து மக்களை காப்பதற்கான தடுப்பு ஊசி இதுவரை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான முயற்சியில் பல நாட்டு மருந்து நிறுவனங்களும் இறங்கியுள்ளன. இதற்காக அவை பாதிக்கப்பட்டவர்களின் இரத்தங்களை கேட்டுள்ளனர். அதிலிருக்கும் தீ நுண்மத்தை ஆராய்ந்து விரைவில் மருந்து தயாரிக்க முடியும் என அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இதுவரை அவர்களின் முயற்சிகள் வெற்றியளித்ததாக தெரியவில்லை.

நோய் தடுப்பு முறை

நோய் தாக்கப்பட்ட நபர்களிடம் இருந்து விலகி இருப்பது அல்லது தவிர்க்க முடியாத காரணத்திற்காக அருகில் செல்லும் போது நுகர்மூடி அணிந்துகொள்வது, மற்றும் வாழுமிடத்தை மிகத் தூய்மையாக வைத்துகொள்ளது நோய் பரவலை தற்போதைக்கு தடுக்கும் முறைகள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.


இரு மணித்தியாலங்கள் இணையத்தில் உலாவியதில் கிடைக்பெற்ற தகவல்கள் இவை. பல்வேறுபட்ட இணையத்தளங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களை தமிழ் மொழியில் தந்திருக்கிறேன். உபயோகப்படுமென என்னுகிறேன். பிடித்திருந்தாலோ அல்லது பிழையிருந்தாலோ உங்கள் கருத்துக்களையும் பதிவேற்றிவிட்டுச்செல்லுங்கள்.

நட்புடன்
சபா

1 comments:

Rooban said...

good continue...
by: Rooban

Post a Comment

FB மூலம் உங்கள் கருத்து....

பகிர்ந்து கொள்ள:

Related Posts Plugin for WordPress, Blogger...

4Tamil