பேய்
பேய் என்றால் என்ன?
சமான்யர்கள் பேய் பற்றிக்கொண்டுள்ள அபிப்பிராயம் என்ன?
பேய் பற்றி விஞ்ஞானம் என்ன சொல்கிறது?
எனவே பேய் உண்டா? இல்லையா?
பேய் என்பது ஒருவர் இறந்த பின்பு அவரின் எதோ ஒரு வகை எச்சம் இருந்து அவர் வசித்த இடங்களில் அலைந்து கொண்டிப்பதான ஒரு வகை நம்பிக்கை. குறிப்பாக தற்கொலை செய்து கொண்டவர்கள், விபத்து அல்லது கொலை போன்றவற்றால் அவருடைய இறப்புக்காலம் வருவதற்கு முன்பாகவே மரணமடைந்தவர்கள் அவர்கள் இறப்புக் காலம் வரும் வரை பேயாக அலைந்து கொண்டிருப்பார்கள் என்கிற நம்பிக்கை ஆசிய நாடுகளில் குறிப்பாக இலங்கை,இந்தியாவில் பெரும்பான்மையானவர்களிடம் இருந்து வருகிறது. இது ஒரு மூட நம்பிக்கை என்றாலும் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்களிடையே இது அதிக அளவில் இருக்கிறது.
பேய் பற்றி விஞ்ஞானம் என்ன சொல்கிறது?
பேய் என்பது மனிதனின் ஒரு கற்பனை உருவாக்கம் மட்டுமே. பேய் மீது அதீத நம்பிக்கை கொண்ட மனிதர்கள், அவர்களின் நரம்புத்தளர்ச்சியாலும், இருதய குறைபாட்டாலும்(heartWeek) உணரப்படக்கூடிய ஒரு காந்தப்புலத்தின் வெளிப்பாடு.
இங்கிலாந்து நாட்டு மனோதத்துவம் மற்றும் நரம்பியல் வல்லுநர் பிரைட்லைட் [Bridelite], காந்தவியல் மின்புலம்மூலம் ஆராய்ச்சி நடத்தி, பேய், பிசாசு இல்லை என்று உறுதி செய்துவிட்டார். அதை மக்களுக்கு உணர வைப்பதற்காக பேய், பிசாசு இருப்பதாகக் கூறப்படும் தற்போது புழக்கத்தில் இல்லாத 800 வருட பழங்காலக் கட்டடம் ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு, ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதில் பேய் மற்றும் பிசாசு பிடித்தவர்கள், தங்களுக்குப் பேய் பிடித்தபோது திடீர் சத்தம் கேட்டதாகவும், இன்னும் ஒரு சிலர் குழந்தை அழுவதுபோல சத்தம் கேட்ட தாகவும், வேறு சிலர் திடீரெனத் தன்னை யாரோ தொட்டுவிட்டு மறைந்துவிட்டது என்றும் கூறினார்கள். சிலர் கூறியது மட்டுமல்லாது அந்தக்கட்டித்தில் மரணித்த சிலரின் சுபாவங்களைப்போல் தாங்களும் நடந்து கொண்டார்கள்.
இவர்களை வைத்து ஆராய்ந்த பிரைட்லைட் : பேய், பிசாசு இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் இருந்து வழக்கத்திற்கு மாறான காந்த புலம் வெளிப்பட்டிருக்கிறது. மூளையில் சில நரம்புகள் பாதிக்கப்பட்டவர்கள் இந்த இடங்களுக்குச் செல்லும்போது அல்லது அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறவர்கள் அந்த இடத்திற்குச் செல்லும்போது வழக்கத்திற்கு மாறான காந்தபுலம் மேற்கூறிய பிரமைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காந்தப்புலத்தின் தாக்கத்தினால் பேய்மீது கொண்ட அதீத (நம்பிக்கை) பயத்தினாலோ சிலர் தங்கள் மீது பேய் பிடித்துள்ளது என்று எண்ணி இறந்த ஒருவரின் சுபாவங்களை வெளிப்படுத்துகிறார்கள். எனவே, பேயோ, பிசாசோ அதைச் செய்யவில்லை என்று கூறியதோடு நின்றுவிடாமல் விஞ்ஞானக் கருவிகளுடன் அவர்களுக்கு அதை நிரூபித்தும் காண்பித்தார்.
அப்போது ஒருவர் பேய் விரட்ட என விஷேடமாக கைதேர்ந்தவகள் சிலர் பேய் பிடித்தவர்களை சாதாரண நிலைக்கு கொண்டு வருகிறார்களே, அது எவ்வாறு சாத்தியமாகிறது. என கேட்டபோது, அதற்கு அவர் அளித்த விளக்கம்: ஆமாம் உண்மைதான். நீங்கள் குறிப்பிடும் நபர்கள் செய்வதும் உடல்சமநிலையை பேனுவதற்கான ஒரு வழிமுறையே, அவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் நரம்புகளின் உணச்சிகளைத்தூண்டி, பாதிக்கப்பட்ட நரம்புகளை மீள் இயங்கச்செய்து அவர்களை சுயநிணைவுக்கு கொண்டுவருகிறார்கள்.
எனவே பேய் உண்டா? இல்லையா?
இதுவரை பேய் உள்ளதென எந்த ஒரு தகுந்த முறையிலும் (மந்திர ஆசாமிகளின் செயல்கள்) நிரூபிக்கப்படவில்லை. ஆனால் பேய் என்பது ஒரு கற்பனை உறுவாக்கம் என்று விஞ்ஞானம் நிரூபித்து விட்டது. எனவே நாமும் பேய் பற்றிய டமூட நம்பிக்கையை புறந்தள்ளி, இவ்ஆய்வின் பிரகாரம் பேய் என்பது மனிதனின் ஒரு கற்பனை உருவாக்கம் . என்ற முடிவுக்கு வருவதோடு நின்று விடாமல். எப்போதும் மணத்தைரியத்தோடு இருந்தால், காந்தசக்தி மட்டுமல்ல வேறு எந்த சக்தியாலும் எம்மை எதுவும் செய்துவிட முடியாது.
1 comments:
இங்குள்ள தரவுகள் விக்கிபீடியா தகவல் கழஞ்சியத்திலும் என்னால் தொகுக்கப்பட்டுள்ளது. அன்பான வாசகர்களே! இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.
Post a Comment