Share

Sunday, February 7, 2010

செம்மொழி மாநாட்டில் கருணாநிதி Vs ரஹ்மான் ஜோடி


வணக்கம் நண்பர்களே!

சில நாள் ஓய்விற்கு பிறகு சிறிதே அசைமீட்ட ஆசை, ஓடோடி வந்து விட்டேன் உடனே பதிவிட. கொஞ்சம் ஓவரா இருக்கில்ல.. சரி விஷயத்து வந்திடுறேன்.

எவ்வளவோ எதிர்பார்ப்பிற்கு மத்தியில் சச்சரவும் அரசியலையும் தாண்டி இப்போ நடந்து கொண்டிருக்கிறது செம்மொழியாம் தமிழ் மொழி மாநாடு. அதில என்ன அதிசயம்னு கேக்காதீங்க அங்க தான் இந்த அதிசயம் . மாநாட்டில வரப்போற ஒரு பாட்டுக்கு ஒருபோதுமில்லாத புது ஜோடி சேரப்போகிறதாம்.

படத்த பாருங்க உங்களுக்கே புரியும். ஆமாங்க இந்த மாநாட்டில வர்ற ஒரு பாடல எழுதினது தமிழ்நாட்டு முதல்வர் கருணாநிதியாம். இசை ஒஸ்கார் இளவரசர் ஏ.ஆர். ரஹ்மானாம். நம்ம தாத்தா என்னத்த செஞ்சாலும் வருசத்துக்கு ஒரு பாட்டு போட்டே தமிழன தலை குனியவச்சிடுவாருப்பா. எல்லாருக்கும் ஒரு திறம, அவருக்கு இது தான் திறம. ம் வாழ்க வளமுடன்....


அந்தப் பாடல் :

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி - அதுவே
செம்மொழி செம்மொழி -நம் தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!

படம் எங்கயோ சுட்டது கண்டுக்காத நைனா...
வரட்டா.... மீண்டும் சந்திக்கும்வரை
அன்புள்ள சபா.

FB மூலம் உங்கள் கருத்து....

பகிர்ந்து கொள்ள:

Related Posts Plugin for WordPress, Blogger...

4Tamil