Share

About Me


வணக்கம் அன்பு உள்ளங்களே !!!

என்னைப்பற்றி ஒரு சில வரிகள்...

நான் ஒரு ஸ்மார்டான ஒரு அழகான... சரி சரி வேணாம் கடுப்பாகுரீங்கனு தெரியுது....



வந்தாரை வாழவைக்கும் வன்னி மாநகரின் தலைநகராம் வவுனியா நகரிலே சில பல வருடங்களிற்கு முன்பு, இந்த பூமியை பாரமாக்கி அன்பினால் இம்சை தர அவதரித்தார் இந்த சபாகரன். எப்பிடி? சொல்லும் போதே ஒரு தில்லு வருதில்ல... அது......!!!



பிறந்தமண் வவுனியா வளர்ந்த மண் கொழும்பு இப்பவும் குப்பகொட்றது இந்த கொழும்பில தாங்க... பள்ளிப்பருவம் பல்கலைக்கழகம் எல்லாங்கடந்து வாழ்க்கையில அரைவாசிய (
சந்தோசமான பகுதிய
) முடிச்சாச்சு ஏதோ முற்பிறப்பில செய்த புன்னியம் நல்லவேளையில பொறியியல் துரையில அதுவும் நம்ம அதிஷ்டம் தொலைத்

தொடர்பாடல் பொ

றியியல் துரையில (Telecommunication Engineering) வேலை. 

சிறுவயதில் ஆர்வமிருந்தாலும் இப்போதெல்லாம் புத்தகமெடுத்து வாசிக்குமளவுக்கு பெரியலவில் வாசிப்புப் பழக்கம் இல்லாதவன். ஆனாலும் நல்ல Blog கிடைச்சா முழுக்க வாசிச்சு முடிப்பேன். காலைல கட்டாயம் எல்லா செய்தி இனையத்தளத்திடமும் ஒரு உலாவல் என்னுடைய கட்டாய கடமைபோலாகிவிட்டது. அதைவிட வெற்றியில் லோசனின் "விடியல்" லன்டன் IBC யில் நண்பன் யாத்ராவின் "வணக்கம் தமிழ்" (எங்கள் நேரம் மதியம் 2மணிக்கு) இடையிடையே சூரியனின் "யார்பேசுறது" பகுதி இவையெல்லாம் தினமும் என்னுடன் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. பிரதான பொழுதுபோக்கு எப்பவும் நம்ம FB தாங்க... எத விட்டாழும் அத விட முடியுமா... மேலதிகமா கலைத்துரையில ஆர்வமிருந்தாலும் அதிகமா ஈடுபடனும்கிற ஆசையில்ல ஆனாலும் நல்ல ரசிகன். என்னச்சுத்தி எப்பவும் ஒருகலைவட்டம் இருந்து கொண்டே இருக்கிறதாலோ என்னவோ அது உடம்போட ஊறிப்போச்சு! 
ஆரம்பத்தில blog எழுதனும்னு ஆசையிருக்கல ஆனாலும் வெப்சைட் செய்றதில மிகப்பெரிய அவா இருந்துது படிக்கற காலத்தில காசுசெலவழிச்சு வெப்சைட் எல்லாம் செய்ய ஏலாது இல்லையா, அதனால blog ஆரம்பிச்சேன். இருந்தாலும் ஒருசில நாற்களிலேயே எனக்கு இலவச வெப்சைட் செய்யக்கூடிய தளங்கள் கிடைச்சதால இரண்டு மூன்று சமூகசேவை வெப்சைட் செய்து இனையத்தில விட்டேன். கொடும என்னனா அத பார்க்க நானே யாருக்கும் கோல் பன்னிசொன்னாதான் உண்டு அப்பிடியே பார்த்தாலும் "ஆ பார்த்தேன் மச்சான் நல்லா இருந்துடா..." அவ்லோதான் ஒரு கொமெண்ட் இல்ல அட்லீஸ் அட்ரஸாவது ஞாபகம் வச்சு இருக்காங்களா எண்ணோட லொல்லு புடிச்ச பிரண்ட்ஸ். அதோட சரி இதுக்குபோய் இவ்ளோ டைம் வேஸ்ட் பன்னனுமானு நினைச்சு update பண்ணாமலே விட்டுட்டேன். அப்ரம் ஏதொ ஒரு உட்சாகம் பழையபடி Blog எழுத தூண்டிச்சு பழச தூசுதட்டி திரும்ப எழுத ஆரம்பிச்சேன். கொங்சநாள் தான் தொடர்ந்தேன். ஆனாலும் என்னோட வேலையின் நிமித்தம் இலங்கை முழுவதும் சுத்தவேண்டியதாயிருந்துது அதனால ஓய்வெடுக்க சாத்தியமில்ல அப்பிடியே கொஞ்சம் ஓய்வுகிடைச்சாலும் வீட்ட ஒருக்கா போய்வரனும்னு தோனும். ஒரு 7,8 மாத ஓய்வுக்கு பிறகு இப்போ திரும்ப ஆரம்பிச்சிருக்கேன்.. உங்களோட ஒத்துளைப்பு எப்பவும் எனக்கு இருக்குமெண்டு நினைக்குறேன்... நீங்க பதிவ பார்த்திடு Fb chatting ல வந்து நல்லா இருக்குனு சொல்றது மட்டும் போதாது. Blog ல கொமண்ட் பண்ணுங்க உங்களோட ஆக்கபூர்வமான கருத்துக்கள பகிர்ந்துகொள்ளுங்கள். தமிழில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்... ஏனென்றால் மீண்டும் தவறு வாராமல் நான் திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்...அது தான் எண்ணோட அடுத்தகட்ட வளர்ச்சிக்கு பிரயோசனமா இருக்கும், தொடர்ந்து என்னையும் எழுத வைக்கும்.... நன்றியுடன் விடைபெறுகிறேன்.

என்றும் அன்புடன் உங்கள் சபா...

வெற்றி! யாருக்கில்லை வெற்றி! நான் இந்த மண்ணில் பிறந்து விழுந்ததே வெற்றிக்காகத் தான் ~தமிழன் கமல்காசன்.


Post a Comment

FB மூலம் உங்கள் கருத்து....

பகிர்ந்து கொள்ள:

Related Posts Plugin for WordPress, Blogger...

4Tamil