Share

Monday, October 1, 2012

சியான் விக்ரமின் அடுத்த தடக்கல் தாண்டவம்

தாண்டவம் தாண்டிச்செல்ல எத்தனிக்கிறது....


விஜய், அஜித்தை போல் தனக்கென்று இரசிகர் கூட்டமில்லாமல் எல்லோரையும் கவர்ந்த சிறந்த நடிகர் விக்ரம்.  இது வரை வெற்றிப்பாதையை மட்டுமே கண்டுவந்த விக்ரமுக்கு கற்கள் முற்கள் நிறைந்த ஒற்றையடிப்பாதையும் அவ்வப்போது சந்திக்கத்தான் செய்கிறது. ராஜப்பேட்டையைத் தொடர்ந்து தாண்டவமும் நிலை தடுமாறுகிற நிலமை. 

பலரின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் எந்த போட்டியுமில்லாமல் களமிறங்கிய தாண்டவத்தில். சிக்ஸ் பேக் காட்டிய விக்ரம் சிக்ஸ் அடிக்கும் கதையை தெரிவு செய்ய மறந்தது ஏனோ... என்று ஏங்க வைக்கிறது.


"கூகில்ல சேர்ச் பன்னாலும் என்னபோல நல்லவன் உலகத்திலயே கிடைக்கமாட்டான்" னு பஞ்சோட வர்ற சந்தானத்தின் காமெடி யோடு மெதுவாக ஆரம்பிக்கும் முதல்பகுதி ரசிகர்களை கவரும் படியாகவே செல்கிறது. படத்தின் முதல் பாதியில் விக்ரமின் கொலை செய்யும் த்ரில்லிங் காட்சிகள் இடம்பெற்றாலும், அதன் பிறகு வரும் காட்சிகள் படத்தை ஆமை வேகத்தில் தான் நகர்த்துகிறது. இடைவேளைக்குப் பிறகு உளவுத்துறையில் பணியாற்றும் விக்ரம் லண்டனுக்கு பயணிப்பது, அங்கு அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என படம் சற்றே சூடு பிடிக்கிறது...





 சற்றே விறுவிறுப்புடன் நகரும் கதையில் உள்நுழையும் அனுஷ்காவின் நடிப்பும் சபாஷ் சொல்ல வைக்கிறது. கணவன் மனைவியாஅல்லாது படம் முடியும் வரை திருமணம்முடித்த நன்பர்களாகவே வாழும் விக்ரம் அனுஷ்கா ஜோடியின் அவ்வப்போது வரும் காதலுக்கு அப்பாற்பட்ட இரசனையூட்டும் நட்பும் நடைமுறை வாழ்வின் ஞாபகங்களை மீட்ட வைக்கிறது.

வழக்கமான பழி வாங்கும் படலம் அடங்கிய கமர்ஷியல் கதை. இத்தனை ஆண்டுகளாக பார்த்து, பார்த்து சலித்துப் போன திரைக்கதையில் "ஹீரோவுக்கு கண் இல்லை, ஆனால் இருப்பது போன்ற புதிய கான்செப்ட்" இதுதான் படத்தின் கரு என்றாலும்,  டேனியல் கிஸ் இன் திறமையை வைத்து எக்கோ லொக்கேஷன், உளவுத்துறை, லண்டன் கதைக்களம் போன்ற யுக்திகளைக்  கையாண்டு திரைக்கதையை  நகரவைத்திருக்கிறார் இயக்குநர் விஜய். அதேசமயம் லண்டன் போலீஸை இதைவிடவும் வேறு யாரும் குறைவாக நினைத்து, கேவலமாக காண்பித்திருக்க முடியாத அளவுக்கு காட்சியமைத்திருக்கிறார், இலண்டன் பொலீசார் ஒவ்வொரு கொலையிலும் கொலையாளியைப் பார்த்த ஒரே சாட்சி சந்தானத்தை மீண்டும் மீண்டும் பிடித்து விட்டுவிடுவது லொஜிக் இல்லாத காட்சி. 



எப்போதும் தனது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடிக்கும் விக்ரம் இப்படத்திலும் கலக்கியிருக்கிறார். உளவுத்துறை அதிகாரியாக இருக்கும் போதும், பார்வையற்றவராக இருக்கும் போதும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வேறுபாட்டை அபாரமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.





படத்தில் மூன்று நாயகிகள் இருந்தாலும், பெரும்பாலான காட்சிகளை ஆக்கிரமிப்பது எமி ஜக்சன் தான். ஆனாலும், ரசிகர்களின் மனதை ஆக்கிரமிப்பது அனுஷ்கா தான். லட்சுமிராய் சில காட்சிகளில் மட்டுமே வருகிறார்.

போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நாசரை, இலங்கை தமிழராக காண்பித்திருப்பது இலண்டன் தமிழரின் இரசணையை அதிகரிக்கும் யுத்திபோல் தெரிகிறது. இலங்கைத் தமிழின் வாசனையோடு பேசும் நாசரின் டைமிங் பிழைத்தாழும் ஏற்றுக்கொள்ளுமளவுக்கு இருக்கிறது. திரைமுழுவதும் கையில் நோட்புக்  கோடு சுற்றும் நாசரின் அங்ரி பேட் விளையாட்டும் இளசுகளை உசுப்பேத்துகிறது.

ஜி.வி.பிரகாஷ் உயிர்கொடுத்த பாடல்கள் சிறப்பாகத்தான் அமைந்திருக்கிறது. அதிலும் னிச்சப் பூவழகி... , உயிரின் உயிரே... பாடல்களின் இசைக்கு v-good சொல்லலாம். கடற்கரை மணலில் டிசைன் வரைந்து அதில் ஆடும் பாடல் காட்சி இயக்குநரின் புதுமைப்புரட்சி.


மொத்தத்தில் விக்ரம், அனுஷ்கா கல்யாண காட்சிக்கு முன் தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், மிர்சி பாலாஜி வரும் லேசாய் புன்முறுவல் மூட்டும் காட்சியும், இரசிக்க வைத்த புதுத்தம்பதியினரின் நட்புக் கலந்த வாழ்க்கைப் பயணமும், பத்து நிமிடமே வந்து சென்றாலும் பார்வையாளரை தம் வசம் வைத்திருந்த சந்தானத்தின் குரும்பு பதில்களும், நல்ல ஒளிப்பதிவும், சண்டைக்காட்சிகளில் வரும்  எடிட்டிங்கும் என்று சில பாராட்டக்கூடிய விஷயங்கள் இருந்தாலும். இவை அனைத்தையும் ஏமாற்றி இரசிகர்களின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்குகிறது படத்தின் கதை, பழைய பஞ்சாங்கத்தை தூசுதட்டி விக்ரமையும் அனுஷ்காவையும் கவிபாட வைத்திருக்கிறார் இயக்குனர் விஜய்.

எனக்கிருப்பதெல்லாம் ஒரே ஆதங்கம் தான் நல்ல படங்களைக் கொடுத்துக்கொண்டிருந்த சிறந்த நடிகர் விக்ரம், விஜய்-No2 ஆக வந்துவிவாரோ என்றுதான். நல்ல நடிப்பை வெளிப்படுத்தும் விக்ரம் நல்ல கதையை தேர்ந்தடுக்க தவறுகிறாரே....
எதிர்பார்ப்போம் இராஜபேட்டை, தாண்டவம் வரிசையில் இன்னுமொன்று சேராதிருக்க வேண்டும் என்று... 

அன்புடன் உங்கள் சபா

FB மூலம் உங்கள் கருத்து....

பகிர்ந்து கொள்ள:

Related Posts Plugin for WordPress, Blogger...

4Tamil